க.பொ.த உயர்தர பரீட்சையில் மேலும் ஏற்பட்டுள்ள தாமதம் - பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவிப்பு

3 weeks ago

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயர்தரப் பரீட்சை மேலும் மூன்று நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உயர்தரப் பரீட்சை டிசம்பர் 4ஆம் திகதி, புதன்கிழமை மீண்டும் ஆரம்பமாகும். பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தலைமையில், விசேட செய்தியாளர் மாநாடு இன்று கொழும்பில் நடைபெற்றது.

இலங்கையில் நிலவும் கடுமையான மழை மற்றும் காற்று போன்ற காலநிலை மாற்றங்கள் காரணமாக நவம்பர் 26 முதல் 29 வரை நடைபெறவிருந்த பரீட்சை தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதற்காமைய, மேலும் 3 நாட்கள் கொடுத்து மொத்தமாக 6 விடுமுறை நாட்களின் பின்னர் உயர்தரப் பரீட்சை டிசம்பர் 4ஆம் திகதி, புதன்கிழமை மீண்டும் ஆரம்பமாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.