மின்சார கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

2 weeks ago

மின்சார கட்டணத்தில் மாற்றம் குறித்த அடுத்த முன்மொழிவு எதிர்வரும் 6ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் மின்சார சபையால் சமர்ப்பிக்கப்பட உள்ளது.


இந்த முன்மொழிவு தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதாக மின்சார சபையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


முன்பு, மின்சார சபை ஆறு முதல் 11 வீதம் வரை மின்கட்டணத்தை குறைக்க முன்மொழிந்த நிலையில், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதனை நிராகரித்தது.


அதன்பின், அடுத்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களைக் கருத்தில் கொண்டு புதிய திருத்தங்களை உருவாக்குமாறு ஆணைக்குழு அறிவுறுத்தியது.


இந்த சூழ்நிலையில், அடுத்த ஆண்டு மின்சாரக் கட்டணங்களில் மாற்றம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.