முட்டை விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

4 days ago

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சராசரியாக 50 கிராமுக்கு குறைவான எடையுள்ள முட்டை ஒன்றை சில்லறை விலையில்  30 ரூபாய் முதல் 32 ரூபாய் வரை விலையிலும் 55 கிராமுக்கு மேல் உள்ள பெரிய முட்டையை 33 ரூபாய் முதல் 35 ரூபாய் வரையிலும் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில  இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் என்டன் அப்புஹாமி தெரிவித்தார்.

பெரும்பாலும் சந்தையில்  இந்த விலைக்கே முட்டைகள் கிடைப்பதாகவும், முட்டைகளை இந்த விலைக்கு மேல் வாங்க வேண்டாம் எனவும் நுகர்வோர்களை அவர் கேட்டுக் கொண்டார்.