பாடசாலை மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

1 week ago

பாடசாலை மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

இலங்கையில் இவ்வருட இறுதிக்குள் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக 6,000 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (26) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில், கல்வியமைச்சினால் அனுகூலங்களைப் பெறுவதற்குத் தகுதியான பிள்ளைகளைத் தெரிவு செய்து அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு கல்வி அமைச்சு முன்னின்று செயற்படுவதாக குறிப்பிட்டார்.