எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
2 weeks ago
நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஒட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெயின் விலை முறையே 3 ரூபா மற்றும் 5 ரூபா ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இருந்தபோதிலும், தேசிய போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இரண்டும் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என அறிவித்துள்ளன. முச்சக்கரவண்டி சங்கமும் பெட்ரோல் விலை குறைப்பு கட்டணத்தை குறைக்க போதுமானதாக இல்லை என தெரிவித்துள்ளது.