வானிலை தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

3 days ago

இன்றைய தினம் (3.1.2025) வளிமண்டவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் முதல் தற்காலிகமாக மழை குறையும் என வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடுமெனவும் எதிர்வு கூறியுள்ளது.

இந்நிலையில், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதாகவும் குறிப்பிட்டுள்ளது