உப்பு இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்
3 days ago
இன்று (03) முதல் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக 2 கட்டங்களாக உப்பு இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு முதல் கட்டமாக 20,000 மெற்றிக் தொன்னும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 10,000 மெற்றிக் தொன்னும் இறக்குமதி செய்வதற்கான விலை மனு கோரல் இன்று (03) முதல் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இறக்குமதி செய்யப்படும் உப்பை கைத்தொழில் அமைச்சின் கீழ் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் உப்பு தொழிற்சாலைகளின் தேவைக்கே பயன்படுத்தப்படுவதாகவும், சாதாரண மக்களின் பாவனைக்கு வழங்கப்படுவதில்லை எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.