வீட்டில் பணவரவு அதிகரிக்க அருமையான பரிகாரம் இதோ!

3 weeks ago

உங்கள் வீட்டில் பணவரவு அதிகமாக இதை செய்யுங்கள்.





                        உங்கள் வீட்டில் பணவரவு அதிகரிக்க இதை செய்யுங்கள். இந்த பரிகாரத்தை செய்வதால் உங்களுக்கு பணக்கஷ்டமே இருக்காது. இந்த  பரிகாரத்தை செய்வதால் உங்கள் கடன் தொல்லைகள் உங்களை விட்டு நீங்கும். 


                     இந்த பரிகாரத்திற்கு ஒரு பச்சை நிறத்திலான பேனை , ஒரு ஐந்து  ரூபாய் நாணயக்குற்றி போன்றவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை  செய்ய உகந்த நாள் புதன் கிழமையாகும். அதுவும் புதன் ஹோரை யில் செய்யுங்கள். இந்த பரிகாரத்தை குபேரனை நினைத்து தான் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செய்ய முதல் ஒரு அமைதியான இடத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள். 


                பின் அந்த ஐந்து ரூபாய் நாணயத்தை மஞ்சள் கலந்த தண்ணீரில் நன்கு கழுவி எடுத்து பின் அதை துடைத்துக்கொள்ளுங்கள். பின் அந்த ஐந்து ரூபாய் நாணயத்தின் மேல் எட்டு என்ற இலக்கத்தை எழுதிக் கொள்ளுங்கள். பின் அந்த நாணயக்குற்றியை உங்கள் வலது பக்க கட்டை விரலில் வைத்து உங்கள் தேவையை சொல்லி வழிபடுங்கள். 


                 பின் அதை எடுத்து ஒரு பேணியில் போட்டு அதன் மேல் வெந்தயத்தை கொட்டி வையுங்கள். இப்படி ஒவ்வொரு புதன் கிழமையும் செய்து இந்த நாணயங்களை சேர்த்துக்கொள்ளுங்கள். பின் அந்த நாணயத்தை பூஜை பொருட்கள் வாங்க பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்வதால் முழுமையான பலனை பெறுவீர்கள்.