இன்று எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள திருத்தம்

2 weeks ago

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலையை மறுபரிசீலனை செய்து திருத்தம் செய்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 95 ஒக்டேன் பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலை லீட்டருக்கு ரூ.6 குறைக்கப்பட்டது. அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட விலை திருத்தம் நவம்பர் மாதம் முழுவதும் நடைமுறையில் இருந்தது. தற்போது, டிசம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இன்று பின்னிரவு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அநுர அரசாங்கம், மக்களுக்கு எரிபொருள் விலை குறைப்பு தொடர்பாக பல்வேறு உறுதிமொழிகளை வழங்கியுள்ளது. குறிப்பாக, நவம்பர் மாதம் முழுவதும் எரிபொருள் விலை நிலையாக இருக்கும் என உறுதியளித்திருந்தது. தற்போது, அந்த உறுதிமொழிக்கு அமையவே நவம்பர் மாதத்தின் முதல் நாளன்று டிசம்பர் மாதத்திற்கான விலை திருத்தம் அறிவிக்கப்படுகிறது.