குழந்தைகளுக்கும் வவுச்சர் வடிவில் அஸ்வெசும கொடுப்பனவு
1 day ago
அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்காத குடும்பங்களைச் சேர்ந்த அனைத்து குழந்தைகளுக்கும் வவுச்சர் வடிவில், 6,000 ரூபா கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இவ்வுதவித்தொகை பெற்றோரை இழந்த குழந்தைகள், மாற்றுத்திறனாளி தாய் அல்லது தந்தை உள்ள குடும்பங்களின் குழந்தைகள், அநாதை இல்லங்களில் படிக்கும் சிறு பிள்ளைகள் மற்றும் சிறப்புக் காரணங்களால் ஆதரவற்ற பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு வழங்கப்படவுள்ளது.
அதேவேளை, பயனாளிகள் அல்லாத சிறுவர் அபிவிருத்தி நிலையங்களிலிருந்து பாடசாலைகளுக்கு வரும் சிறார்களுக்கும் இலவசமாகக் கல்விகற்கும் மாணவர்களுக்கும் கொடுப்பனவுகள் வழங்கப்படும்.
இந்த உதவித்தொகை 300க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 6,576 பாடசாலைகளைச் சேர்ந்த பயனாளிகள் அல்லாத குடும்பங்களின் அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்படவுள்ளது.