அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய செய்தி
அரச உத்தியோகத்தர்களுக்கான பண்டிகைக் கால முற்பணத்தை 40,000 ரூபாவாக அதிகரிக்க கோரிக்கை
அரச உத்தியோகத்தர்களுக்கான பண்டிகைக் கால முற்பணத்தை இம்முறை குறைந்தபட்சம் 40,000 ரூபாவாக அதிகரிக்க வேண்டுமென அரச அதிகாரிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் சுமித் கொடிகார கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய 10,000 ரூபாய் பண்டிகைக் கால முற்பணம், தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு பொருந்துவதில்லை என அவர் குறிப்பிட்டார். அதே நேரத்தில், பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 6,000 ரூபாய் உதவித்தொகையை அரச அதிகாரிகளின் பிள்ளைகளுக்கும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டுக்கான அரச அதிகாரிகளுக்கு விசேட முற்பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, அரச உத்தியோகத்தர்களுக்கு 4,000 ரூபாவிற்கு மிகாமல் விசேட முற்பணமாக வழங்குவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை, அரசாங்கத்தின் செயலாளர் எஸ். அலோக பண்டார (S. Aloka Bandara) சுற்றறிக்கையில் தெரிவித்தார்.
இந்த முன்பணம் 2025ஆம் ஆண்டில் ஜனவரி 01ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 28 வரை வழங்கப்படும் என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.