நாட்டின் பல பகுதிகளில் 18 மணித்தியால நீர்விநியோகத் தடை!
நாட்டின் பல பகுதிகளில் 18 மணித்தியால நீர்விநியோகத் தடை!
நாட்டின் பல பகுதிகளில் 18 மணித்தியால நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இதன் படி, களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, வாதுவ, வஸ்கடுவ, மொரொன்துடுவ உள்ளிட்ட பகுதிகளில் 18 மணித்தியால நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படும்.
இன்றைய (26.12.2024) காலை 9 மணி முதல் நாளை (27.12.2024) அதிகாலை 3 மணி வரை நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நீர்விநியோகத் தடை, நீர் குழாய்களில் மேற்கொள்ளப்படும் அவசர திருத்தப்பணிகள் காரணமாக அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, மக்களுக்கு தகுந்த முன்னெச்சரிக்கை எடுத்து, தங்கள் நீர்வரத்து தேவைகளை முன்கூட்டியே பரிசீலிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.