யாழ்ப்பாணத்தை சோகத்தில் ஆழ்த்திய A/L மாணவியின் தவறான முடிவு – வெளியான காரணம்..!

3 days ago

யாழில் உயர்தர பரீட்சை திருப்திகரமாக அமையாமல் உயிரிழந்த மாணவி – சோகமான சம்பவம்

யாழில், உயர்தர பரீட்சை திருப்திகரமாக அமையவில்லை என்ற விரக்தியில் ஒரு மாணவி தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:


தெல்லிப்பழையிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயின்ற மாணவியொருவர் இந்த ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றியிருந்தார். 

நேற்றையதினம் (30) பரீட்சை முடிந்து வீட்டுக்கு வந்த அவர், பரீட்சை திருப்திகரமாக இல்லை என தாய், தந்தையருக்கு கூறி கவலையடைந்தார். 

பின்னர், அவரது தந்தை கடமை நிமிர்த்தம் வெளியே சென்றபோது, குறித்த மாணவி வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரிழந்தார்.

குறித்த மாணவி, க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 7ஏ 2பி சித்திகள் பெற்றவர் எனவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயவாலசிங்கம் மேற்கொண்டதுடன், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.