அடுத்த 36 மணித்தியாலங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு!

2 weeks ago

அடுத்த 36 மணி நேரத்தில் இலங்கையின் வடக்கு, மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஃபெங்கல் புயல் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியை கடந்து இந்தியாவில் நுழைந்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய இராணுவம் மற்றும் மீட்புக்குழுவினர் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் கடந்த 30 வருடங்களில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்துள்ளது. 480 மில்லிமீற்றருக்கும் அதிகளவிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. புதுச்சேரியின் பல பகுதிகள் தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.