ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
3 days ago
ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
எதிர்வரும் ஆண்டுக்கான (2025) ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கலுக்கான திகதிகள் உள்ளடக்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், 2025 ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியமானது ஜனவரி, பெப்ரவரி, மார்ச், செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பத்தாம் திகதி ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளதுடன்
ஏப்ரல், மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஓய்வூதியம் ஒன்பதாம் திகதியும் வழங்கப்படவுள்ளது.
அத்துடன் ஒகஸ்ட் மாதம் மாத்திரம் ஏழாம் திகதி ஓய்வூதிய கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.