மத்தியவங்கி ஆளுநர் வட்டி வருமானம் தொடர்பில் வெளியிட்ட அறிவிப்பு!
1 day ago
நாட்டில் பணவீக்கம் அதிகரித்தால் வட்டி வருமானத்தின் பெறுமதி குறைந்து விடும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது வட்டி வீதங்கள் குறையும் போது, வைப்புக்களுக்கான வட்டி வருமானம் குறைவடையும். ஆனால் இலங்கையிலேயே வட்டி வீதங்கள் அதிகம் என்பதால் வைப்புக்களை வைத்து வரும் வட்டியில் வாழ முயற்சிக்கின்றனர்.
ஏனைய நாடுகளில் வட்டி வீதங்கள் மிகவும் குறைவாகும். எனவே அங்கு பணத்தை வைப்புச் செய்து அதில் கிடைக்கும் வட்டி வருமானத்தில் வாழ்வது கடினமாகும். இந்நிலையில் பணவீக்கம் அதிகரித்தால் வட்டி வருமானத்தின் பெறுமதி குறைந்து விடும் எனவும் அதனைவிட அந்தப் பணத்தை வேறு வழிகளில் முதலீடு செய்து உழைக்கலாமெனவும் குறிப்பிட்டுள்ளார்.