இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
3 weeks ago
இலங்கையில் பிரபல நிறுவனங்களின் பெயரை பயன்படுத்தி இடம்பெறும் சைபர் மோசடிகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல நிறுவனங்களின் பெயரில் "Free Giveaway" போன்ற மோசடி செய்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன. இதன் மூலம் மக்களை இணையதளங்களுக்கு இழுத்து, அவர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி, சமூக ஊடக கணக்குகளை அபகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த மோசடிகள் காரணமாக மக்கள் தங்கள் பணம், தனிப்பட்ட தகவல்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகளை இழக்க நேரிடலாம். மேலும், இது இலங்கையின் சைபர் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம், பொதுமக்களை இவ்வாறான மோசடி செய்திகளை கிளிக் செய்வது தொடர்பில் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் சங்கத்திற்கு இந்த விவகாரம் தொடர்பாக ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.