பேக்கரி பொருட்களின் விலைக் குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
பேக்கரி பொருட்களின் விலைக் குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
இலங்கையில் முட்டை விலை காலநிலை போன்றது. இன்றுள்ள விலை நாளை இல்லை. நாளுக்கு நாள் மாற்றமடைகிறது. 15, 20 ரூபாவுக்கு இருந்த முட்டை 60, 70 ரூபாவரை விலை அதிகரித்தது.
தற்போது நாட்டில் மீண்டும் 25,30 ரூபாவரை விலை குறைந்துள்ள போதும் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறைப்பு மேற்கொள்வதற்கு நிச்சயமாக கோதுமை மா மற்றும் மாஜரின் விலை குறைவடையவேண்டும். கோதுமா விலை குறைப்பு தெரிந்தளவில் இரண்டு வருடங்களுக்கும் அதிக காலமாக இடம்பெறவில்லை.
டொலரின் பெறுமதி 300, 400 ரூபாவுக்க இருக்கும்போது இருந்த விலையே தற்போதும் கோதுமை மா விலை இருந்து வருகிறது. எனவே இதில் அரசாங்கம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது கோதுமை மா மற்றும் மாஜரின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் தற்போது கடைகளில் ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ கிராம் கேக், 700 ரூபாவரை குறைத்து விற்பனை செய்ய முடியும்.
அவ்வாறு இல்லாமல் முட்டை விலை குறைவடைந்தவுடன் பேக்கரி பொருட்களின் விலையில் மாற்றம் செய்ய எந்தவகையிலும் முடியாது என்றும் அவர் கூறினார்.