யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு!

6 days ago


யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு!

நேற்றைய தினம்   (27.12.2024)  யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன்  கருத்து தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்தில் சமீப காலமாக டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் வாரத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு தினங்களாக இரண்டு தினங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் டெங்கு நோயின் தாக்கம் பற்றி பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.