நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை!
4 days ago
இன்று (17.12.2024) செவ்வாய்க்கிழமை பசிபிக் கடலில் வனுவாட்டு தீவுக்கு அருகே 7.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நில அளவாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கமானதுபோர்ட்- விலாவிற்கு மேற்கே 30 கி.மீ. தொலைவில் 43 கி.மீ ஆழத்தில் தாக்கி உள்ளது. இந்நிலையில் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சுமார் 330,000 மக்கள் வசிக்கும் 80 தீவுகளைக் கொண்ட வனுவாட்டு தீவுகள் மற்றும் நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது