இன்று மாலை வலுப்பெறும் ஃபெங்கல் புயல் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
3 weeks ago
தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து சூறாவளி புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த புயல் தமிழகக் கடற்கரைப் பகுதிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, திருகோணமலையில் இருந்து கிழக்கே 110 கி.மீ., நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 350 கி.மீ., புதுச்சேரிக்கு தென்கிழக்கே 530 கி.மீ., சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவில் உள்ளது.
இந்நிலையில், வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இன்று மாலை 5.30 மணிக்கு சூறாவளி புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.