பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

3 days ago

நாட்டில் எதிர்வரும் 2025ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது பாடசாலை மாணவர்களில் 55 வீதத்திற்கும் அதிகமானோர் அதிக பொருளாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதுடன் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 25,000 மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என இன்று (17) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,  பொருளாதார நெருக்கடியால் கிராமிய மற்றும் பெருந்தோட்டப் பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் இந்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாகவும் சுட்டிக் காட்டினார்