கொடுத்த கடனை திரும்ப பெற சூப்பாரான 4 பரிகாரங்கள் இதோ!
இந்த நான்கு பரிகாரங்களையும் முழு நம்பிக்கையுடன் செய்வதால் முழுமையான பலனை பெறுவீர்கள். முதலாவது பரிகாரத்திற்கு ஒரு வெள்ளை நிறத்திலான துணி மற்றும் ஒரு கரண்டி கல்லுப்பு , ஒரு கரண்டி வெந்தயம் , ஒரு கரண்டி கறுப்பு எள்ளு போன்றவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். பின் அந்த மூன்றையும் வெள்ளை நிற துணியில் வைத்து கட்டி விட்டு பின் அதை உங்கள் வீட்டில் தென்மேற்கு மூலையில் காட்டிக்கொள்ளும் கள். பின் அதை ஒரு மாதத்திற்கு ஒரு முறை மாற்றுங்கள்.
இரண்டாவது பரிகாரத்தை செய்வதற்கு இருபத்தேழு மிளகுகளும் , மஞ்சள் , குங்குமம் , ஒரு அகழ் விளக்கு போன்றவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். பின் ஒரு வெள்ளை நிற துணியில் அந்த இருபத்தேழு மிளகு களையும் போட்டு நன்கு சுற்றிகட்டுங்கள். பின் அதை ஒரு அகழ் விளக்கில் வைத்து எரித்துக்கொள்ளுங்கள். இதை சனிக்கிழமைகளில் செய்யுங்கள்.
மூன்றாவது பரிகாரம். இந்த பரிகாரத்தை செய்வதற்கு முதலில் ஒரு பித்தளை தட்டை எடுத்துக்கொள்ளுங்கள். பின் அதில் ஒரு கைப்பிடியளவு பச்சிரிசியை போட்டுக் கொள்ளுங்கள். பின் அதில் இரண்டு கரண்டி மஞ்சள் மற்றும் வாசனை நிறைந்த பூக்களை போட்டு கொள்ளுங்கள். பின் அதில் ஒரு கைப்பிடியளவு எள்ளையும் போட்டு கொள்ளுங்கள் . பின் அதை சூரியனை பார்த்தவாறு நின்று கொண்டு உங்களுக்கு கடனை தர வேண்டிய நபரின் பெயரை மூன்று முறை உச்சரித்த பின் ஓம் ஹ்ரீம் பைரவாய நமஹா என்ற மந்திரத்தை சொல்லி சொல்லி அதை நிலத்தில் தூவி விடுங்கள்.
அடுத்து நான்காவது பரிகாரம். இந்த பரிகாரத்திற்கு ஒரு சிவப்பு நிறத்திலான பேனையும் , ஒரு கொப்பியையும் எடுத்துக்கொள்ளுங்கள். பின் அந்த கொப்பியின் நான்கு மூலையிலும் மஞ்சளை வைத்துக்கொள்ளுங்கள். பின் அதில் ஓம் உங்கள் குலதெய்வத்தின் பெயரை எழுதி நமஹா என்று போடுங்கள். பின் அடுத்த வரியில் ஓம் விக்கினங்களை தீர்க்கும் விநாயக நமஹா என்று எழுதுங்கள் . பின் அடுத்த வரியில் ஓம் ஸ்ரீம் மகா பைரவாய நமஹா என பதினொரு முறை எழுதுங்கள். இதை தொடர்ந்து நூற்று எட்டு நாட்கள் செய்ய வேண்டும். இதை செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.