நீதிமன்றம் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிறப்பித்த அதிரடி உத்தரவு

4 days ago

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அர்ச்சுனா எம்பி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்றபோது, வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தியுடன் ஏற்பட்ட தர்க்கம் காரணமாக, அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்ததாக கூறி பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், இன்று (16) சட்டத்தரணியுடன் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார். நீதவான், அர்ச்சுனா எம்பியை கடும் எச்சரிக்கையுடன் பிணையில் விடுவித்து, அவருக்கு விதிமுறைகளை கடைப்பிடிக்க உத்தரவிட்டுள்ளார்