கொழும்பில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
கொழும்பில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு தரமற்ற உணவுப் பொருட்களை வாடிக்கையாளர்களை ஏமாற்றி விற்பனை செய்யும் நோக்கில் சில விற்பனையாளர்கள் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொழும்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்ட விசேட பரிசோதனையில் சட்டத்தை மீறிய 11 வர்த்தகர்கள் பிடிக்கப்பட்டு எதிராக வழக்கு தொடர் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொழும்பு புறக்கோட்டை பகுதியில் பழங்கள் விற்பனைஅங்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் உலர் பழங்கள் விற்பனை செய்யும் 178 மொத்த விற்பனை கடைகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கொழும்பு 4ஆம் குறுக்குத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 250 கிலோவிற்கும் அதிகமான உலர் பழங்கள் மனித பாவனைக்குத் தகுதியற்றவை எனவும் அதிகளவிலான மரக்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் என்பன மனித பாவனைக்கு தகுதியற்றவை எனவும்
பொதுசுகாதார பரிசோதகர்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டன