நோயாளர் காவு வண்டி மற்றும் பேருந்து இடையே ஏற்பட்ட பாரிய விபத்து

3 days ago

இன்று (17.12.2024) காலை   மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் செட்டிபாளையத்தில் மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த நோயாளர் காவு வண்டி (அம்பியுலன்ஸ்) அதே திசையில் எதிரே சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் மோதி ஏற்பட்ட பாரிய விபத்தில்

இதில் 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இக்குறித்த விபத்துச் சம்பவத்தில் பேருந்தில் பயணித்த பிரயாணிகள் எவருக்கும் எதுவித சேதமும் ஏற்படாத நிலையில், நோயாளர் காவு வண்டியில் பயணித்த சாரதி, விசேட தாதிய பரிபாலகி மற்றும் பொது சுகாதார பரிசோதகர் ஒருவருமாக மூன்று பேர் இதில் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்