யாழிற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்!
3 weeks ago
யாழ்ப்பாணம், பருத்தித்துறை வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புனித நகர் கிராமம், சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக, இன்று (28) முற்பகல் காலை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், அவர் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரடியாக கலந்துரையாடி, அவர்களது பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.