கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை

7 hours ago

கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களுடன், நுவரெலியா, கண்டி   அம்பாறை மாவட்டங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (22.12.2024)   அறிக்கை வெளியிட்டுள்ளது.

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுடன், அநுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில், காலை நேரத்தில் பனிமூட்டமான நிலை காணப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது 

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களின் மூலம் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க, பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.