மின்கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

2 weeks ago

மின்கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இலங்கையில் மின் கட்டண திருத்தம் குறித்து மின்சார சபை  முன்மொழிவு மற்றும் கட்டண திருத்தம் சமர்ப்பித்துள்ள ஆகியவற்றை சமர்ப்பித்துள்ள நிலையில் கடந்த 17 ஆம் திகதி எழுத்துமூல கருத்துக்களை பெறும் நடவடிக்கை ஆரம்பமானதுடன் எதிர்வரும் 27 ஆம் திகதி  பொதுமக்களின் கருத்துக்களை பெறுவதற்கான வாய்மூல அமர்வுகள் கண்டியில் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் அடுத்த 6  மாதங்களுக்கு மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படக் கூடாது என்ற முன்மொழிவுகளை மின்சார சபையானது முன்வைத்திருந்த நிலையில் அதற்கான எதிர்ப் பிரேரணைகளை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு முன்வைக்கும் போது மின்கட்டணமானது 10 முதல் 20 வீதம் வரை குறைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்ற பின்னர் ஜனவரி 17 ஆம் திகதி இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் தொடர்பாடல் திணைக்களத் தலைவர் ஜெயநாத்    ஹேரத் தெரிவித்துள்ளார்.