இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

8 hours ago

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (10) நாணய மாற்று விகிதங்களின் படி, நேற்றையதினம் 291.75 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி இன்றையதினம் 290.64 ரூபாவாக குறைந்துள்ளது.

இந்த நிலையில், நேற்றையதினம் 300.52 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி இன்றையதினம் 299.92 ரூபாவாக குறைந்துள்ளது.

மேலும், ஸ்டெர்லிங் பவுண்டின் கொள்முதல் பெறுமதி 355.98 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 369.77 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297.61 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 309.96 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலரின் கொள்முதல் பெறுமதி 200.40 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 209.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் கொள்முதல் பெறுமதி 178.17 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 187.55 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.