மாணவர்களுக்கு இலவச புள்ளி : மற்றுமொரு பரீட்சை வினாத்தாள் சர்ச்சை!

5 hours ago

வடமேற்கு மாகாணத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் தவணைப் பரீட்சையில் தரம் 10 ஆங்கில வினாத்தாள் ஏராளமான பிழைகளுடன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தவிசாளர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பிரதம ஆங்கில வினாத்தாளின் கேள்வி எண் 3 இல், வரைபடம் இல்லாமல் படத்தின் அடிப்படையில் பதில் அளிக்க வேண்டும் என்றும், இரண்டாவது வினாத்தாளில் பதில் அளிக்க முடியாத மூன்று கேள்விகள் பிழையாக இருந்ததாகவும், பிரியந்த பெர்னாண்டோ கூறியுள்ளார்.

மேலும், இரண்டாவது வினாத்தாளில் கேள்வி 1 இன் படி, வார்த்தைகள் கொடுக்காமல் வெற்றிடங்களை நிரப்பவும், அகராதிப் பக்கம் பார்த்து 18வது கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அகராதிப் பக்கம் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வினாத்தாளில் உள்ள பல கேள்விகள், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தவணை பரீட்சையின் வினாத்தாளின் நகல் என பிரியந்த பெர்னாண்டோ குற்றம் சுமத்தினார்.

இதன் பின்னர், இரண்டாவது வினாத்தாளில் உள்ள மூன்று தவறான கேள்விகளுக்கு ஒவ்வொரு மாணவருக்கும் இருபது மதிப்பெண்கள் வழங்குமாறு வடமேற்கு மாகாண பாடப் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்தப் பிரிவின் (தரம் 0) கீழ் 47,000 வினாத்தாள்கள் அச்சிடப்பட்டதாகவும், இதற்காக அரசாங்கம் 100,000 ரூபாய்க்கு மேல் செலவிட்டதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தவிசாளர் பிரியந்த பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேசமயம், கல்வியில் இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் குறித்து அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றும், இது போன்ற விடயத்தால் மாணவர்கள் பலியாகக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.