வவுனியா ஏ9 வீதி வெள்ளம் மற்றும் போக்குவரத்து தடை - யாழில் இருந்து கொழும்பு பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு

3 weeks ago

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா ஏ9 வீதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு, போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. ஓமந்தை பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. நொச்சிமோட்டை மற்றும் சாந்தசோலை ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் அதிகளவில் வழிந்தோடுவதால் கனரக வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் உள்ளன. வாகன ஓட்டிகள் மாற்று வழிகளை பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 யாழ்ப்பாணம்-கொழும்பு பிரதான வீதியின் புத்தளம் பிரதேசத்தில் மரம் விழுந்ததால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.  பல நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிந்து, ஆறுகள் பெருக்கெடுத்து வருகின்றன. குறிப்பாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் இருந்து அதிகளவு நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாகன ஓட்டிகள், ஏ9 வீதியை பயன்படுத்துவதற்கு பதிலாக மாற்று வழிகளை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.