O/L பரீட்சை நேர அட்டவணையில் மாற்றம்?

1 day ago

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை,  நோன்பு காலத்தில் வருவதன் காரணமாக முஸ்லிம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்க்கட்சி உறுப்பினர் முகம்மத் இஸ்மாயில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) நடைபெற்ற வருட ஆரம்ப நிதிநிலை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில், அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக நாங்கள் அரசாங்கத்துக்கு நன்றி செலுத்துகிறோம்.

எனினும், மார்ச் மாத காலப்பகுதியிலேயே தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே சமயம், இந்த காலத்தில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புனித ரமழான் நோன்பு மாதம் இந்த காலப்பகுதியில் துவங்கப்போகிறது. அதனால், பரீட்சை இந்த நேரத்தில் நடைபெறுவதால், முஸ்லிம் மாணவர்களுக்கு அது பாதிப்பாக அமையும்.

எனவே, இந்த விடயத்தை கவனத்தில் கொண்டு, அரசாங்கம் பரீட்சை நேர அட்டவணையில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.