புதுவருடத்திலிருந்து தேங்காய் விலையில் ஏற்படவுள்ள மாற்றம் தற்போது வெளியாகியுள்ள தகவல்
எதிர்வரும் மார்ச் மாதம் வரையில் தேங்காய் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லையென தெங்கு அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில், மார்ச் மாதம் வரையில் தேங்காய் விளைச்சல் கிடைக்காத நிலையில், தொடர்ந்தும் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாந்த ரணதுங்க கூறியுள்ளார்.
மேலும், கைத்தொழில் துறைக்கும் நுகர்வுக்கும் தேங்காய் விநியோகம் செய்வதில் சிரமங்கள் நிலவி வருவதாகவும், இதனால் தேங்காய் விலை தொடர்ந்து உயர்வடையும் எனவும் அவர் தெரிவித்தார். இந்த நிலைமை, தேங்காய் விளைச்சல் கிடைக்கும் வரை நீடிக்கும் என்று அவர் கூறினார்.
நாட்டில் தற்போது நிலவும் தேங்காய் தட்டுப்பாட்டிற்கு தீர்வு வழங்கும் நோக்கில், அரசாங்கத்தின் சொந்தமான தென்னந்தோப்புகளில் விளையும் தேங்காய்களை சதொச நிறுவனத்தின் மூலம் நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.