அத்தியாவசியப் பொருட்களின் சடுதியான விலை அதிகரிப்பு!
1 week ago
தற்போது அரிசி, தேங்காய், தேங்காய் எண்ணெய், மரக்கறிகள் போன்ற அன்றாட பாவனைக்கான அத்தியாவசிய ல்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதால் தாம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது சந்தையில் ஒரு கிலோ வெள்ளை அரசி 240-260 ரூபாவாகவும், தேங்காய் ஒன்றின் விலை 220-240 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் குறைந்த வருமானம் பெறுபவர்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்படுவதுடன் பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், மக்கள் பெரிதும் விசனமடைந்துள்ளனர்.