சற்று முன்னர் சம்பள உயர்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு

1 week ago

சற்று முன்னர் சம்பள உயர்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு

நேற்றைய தினம் நாட்டில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார ரீதியான கஷ்டங்களை தணிப்பது தொடர்பில் அரசின் உறுதிப்பாட்டை வலியுறுத்தி எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு நிச்சயம் வழங்கப்படுமென தொழில் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு துணை அமைச்சருமான அனில் ஜயந்த செய்தியாளர் சந்திப்பில்  குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பில் குறிப்பிடுகையில், பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ளது. 2026 இலேயே இதை செய்வோம் என்று கூறிக் கொண்டிராமல் மக்களின் நிலையறிந்துள்ளோம் என்ற அடிப்படையில் நிச்சயமாக சம்பள உயர்வை எதிர்பார்க்கலாமென குறிப்பிட்டார்.