பரீட்சை முறைமை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
14 hours ago
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக நடத்தப்படும் பரீட்சைகள், அடுத்த வருடம் முதல் முன்பு போலவே வழமையான முறையில் நடத்த முடியுமென பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து தெரிவிக்கும்போதே, அவர் இந்த தகவலை வழங்கினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர பிரதமரிடம் முன்வைத்த வாய்மொழி கேள்விக்கு பதிலளிக்கும் போதே, பிரதமர் இதனை குறிப்பிட்டார்.
அதன்படி, 2026 ஆம் ஆண்டில் இருந்து, முன்பு இடம்பெற்றது போன்றே சாதாரண முறையில் பரீட்சைகளை நடத்த முடியும் என அவர் கூறியுள்ளார்.
மேலும், கோவிட் தொற்று ஆரம்பிக்கும் முன்னர் இடம்பெற்றமையை போன்று பரீட்சைகளை உரிய கால அட்டவணையில் நடத்தப்பட முடியும் எனவும், பிரதமர் தெளிவுபடுத்தினார்.