இலவச சீருடை விநியோகம் குறித்து வெளியான தகவல்

7 hours ago

2025 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வியாண்டு ஜனவரி 27 ஆம் திகதி ஆரம்பமாவதுடன், அதே நேரத்தில் இலவச சீருடை விநியோகம் தொடங்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இலவச சீருடை விநியோகம் தொடர்பான நடைமுறை விதிகள் அடங்கிய சுற்றறிக்கை, அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் கல்வி அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விநியோகம், வலய மற்றும் கோட்டக் கல்வி அதிகாரிகளால், பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அளவில் 10,000 க்கு மேற்பட்ட பாடசாலைகளில் சுமார் 40 இலட்சம் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

இந்த மாணவர்களுக்கான சீருடைத்துணிகள் அனைத்தையும் சீன அரசாங்கம் இலவசமாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.