முட்டை விலையில் சடுதியான வீழ்ச்சி
1 week ago
இலங்கையின் ஜாஎல, கந்தானை, ராகம உள்ளிட்ட பிரதேசங்களில் பகுதிகளில் முட்டை விலை வேகமாக வீழ்ச்சியடந்து வருவதாக முட்டை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைவாக, முன்னர் 40 ரூபாய் தொடக்கம் 45 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது 25 ரூபாய் தொடக்கம் 30 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு எதிர்வரும் நாட்களில் சில பொருட்களின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் வர்த்தக சங்கங்கள் தெரிவிக்கின்றன.