வைத்தியர்களின் ஓய்வு வயது நீடிப்பு: வெளியான புதிய வர்த்தமானி அறிவிப்பு

11 hours ago

வைத்தியர்களின் ஓய்வு வயது நீடிப்பு: வெளியான புதிய வர்த்தமானி அறிவிப்பு

அனைத்து மருத்துவர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லையை 63 ஆக நிர்ணயம் செய்யும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஓய்வூதிய அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின்படி, 2022 ஆம் ஆண்டின் டிசம்பர் 12 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் திருத்தப்பட்டு, மேற்படி புதிய வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதன் படி, மருத்துவ நிபுணர்கள், தர மருத்துவ மற்றும் பல் மருத்துவ அலுவலர்கள், மருத்துவ நிர்வாக தரத்திலுள்ள அனைத்து அலுவலர்களும், பல் மருத்துவ நிபுணர்களும், மற்றும் பதிவுசெய்யப்பட்ட மருத்துவ தொழிலாளர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லை 63 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தல், அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் அனுமதியுடன் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் அதன் ஏற்பாடுகள் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது