மின்சார கட்டணம் குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்!

20 hours ago

மின் கட்டணமானது இரண்டு, மூன்று நாட்களில் குறைக்கப்படும் என தமது அரசாங்கத்தில் எவரும் கூறவில்லை என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்;

கடந்த அரசாங்கம் செய்துகொண்ட ஒப்பந்தங்களின்படி மின்கட்டணத்தை குறைக்க முடியாது எனவும், நுகர்வோருக்கு மின்சாரம் வழங்குவதை விட ஒரு மின் அலகுக்கு வாரியம் அதிக பணத்தை செலவிடுகிறது என்றுள்ளார்.

மேலும், மின்சாரக் கட்டணத்தை 37 வீதத்தால் அதிகரிக்க மின்சார சபை அண்மையில் முன்மொழிந்திருந்த போதிலும், கட்டணத்தை அதிகரிக்காமல் அரசாங்கம் சமாளித்து வருகின்றது என தெரிவித்துள்ளார்.