மின்சாரக் கட்டணத் திருத்தம் – பொதுமக்கள் கருத்து கணிப்புகள் இன்று முதல் மாகாண மட்டத்தில் ஆரம்பிக்கப்படும்

1 week ago


மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துக் கணிப்புகள் இன்று முதல் மாகாண மட்டத்தில் ஆரம்பிக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன் படி, மத்திய மாகாணத்தில் இன்றைய தினம், கண்டி மாவட்ட செயலக வளாகத்தில் இந்த கருத்து கணிப்புகள் நடைபெறவுள்ளன.

மேலும், ஊவா மாகாணத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி மற்றும் சப்ரகமுவ மாகாணத்தில் ஜனவரி 3ஆம் திகதி பொதுமக்களின் கருத்துக் கணிப்புகள் நடாத்தப்படவுள்ளது. மேலும, மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான கருத்துக்கள் ஜனவரி 10ஆம் திகதி பண்டாரநாயக்க மாநாட்டு மண்டப வளாகத்தில் நடத்தப்படும்.

மின்சாரக் கட்டணங்களை குறைக்க முடியாது என்ற மின்சார சபையின் பரிந்துரைக்கு பதிலாக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பதில் அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான இறுதித் தீர்மானம் ஜனவரி 17ஆம் திகதி அறிவிக்கப்படும் என ஆணைக்குழு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.