அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய தகவல்கள்

1 week ago


அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மேலும் ஒரு மாதம் நீடிக்கும் – ருவன் செனரத்

நாட்டில் அரிசி மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதியமைச்சர் ருவன் செனரத் (Ruwan Senarath) தெரிவித்துள்ளார்.

தங்காலையில் (Tangalle) நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: "அரிசி தட்டுப்பாடு இன்னும் நீங்கவில்லை மற்றும் பொருட்களின் விலை குறைவடையவில்லை. இன்று பலர் பொருட்களின் விலையை குறைப்பது தொடர்பாக முறைப்பாடுகளை முன்வைக்கின்றனர். அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இதற்கான தெளிவுகளை நாங்கள் பெற்றுள்ளோம். இந்த நிலமை தொடர்பான பொறுப்பை கடந்த அரசாங்கமே ஏற்க வேண்டும். நாங்கள் ஆட்சியைப் பொறுப்பேற்கும் போது, பெரும்பாலான நெல் களஞ்சியசாலைகள் தனியாரிடமே இருந்தன. இந்த நிலைமையை சீர் செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் குறிப்பிட்டார்.