ரூபாவின் பெறுமதியில் திடீர் வீழ்ச்சி!

2 days ago

நேற்றைய தினத்தை ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி திடீரென வீழ்ச்சி அடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (07) நாணய மாற்று விகிதங்களின் படி, நேற்றையதினம் 289.72 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதியானது இன்றையதினம் 291.32 ரூபாவாக அதிகரித்து, சடுதியான வீழ்ச்சியைக் காட்டியுள்ளது.

இந்த நிலையில், நேற்றையதினம் 298.41 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதியானது இன்றையதினம் 299.92 ரூபாவாக அதிகரித்துள்ளது.

மேலும், ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 363.13 ரூபா ஆகவும், விற்பனைப் பெறுமதி 377.21 ரூபா ஆகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300.65 ரூபா ஆகவும், விற்பனைப் பெறுமதி 313.20 ரூபா ஆகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201.80 ரூபா ஆகவும், விற்பனைப் பெறுமதி 210.68 ரூபா ஆகவும் பதிவாகியுள்ள அதே வேளை, அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 180.17 ரூபா ஆகவும், விற்பனைப் பெறுமதி 189.63 ரூபா ஆகவும் பதிவாகியுள்ளது.